இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
முகப்பு | சினிமா | சீரியல் | செய்திகள் | |
வீடியோ பார்க்க இடதுபுறமாக ஸ்வைப் செய்க | ||||
👇விளம்பரம்| தொடர்பு கொள்ள கிளிக் செய்யவும்👇 ![]() |
குஷியான செய்தி... தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இப்போதே வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. இந்நிலையில், பிப்ரவரி 25 முதல் மாா்ச் 1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நாளை பிப்ரவரி 24ம் தேதி திங்கட்கிழமை வறண்ட வானிலையே நிலவும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 25ம் தேதி முதல் மாா்ச் 1ம் தேதி வரை தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பிப்ரவரி 24ம் தேதி திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 27 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் கரூரில் பரபரப்பு…!!!
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒரு 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கரூரில் தற்போது ஒரு 10-ம் வகுப்பு மாணவியை மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டி பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளான். மேலும் இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
ரவி மோகனைத் தொடர்ந்து பெயரை மாற்றிய நடிகர்!
நடிகர் கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், மணிரத்தனம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, பத்துதல உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது, இவர் ஆர்யாவுடன் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அறிவிப்பு போஸ்டரில் இவரின் பெயர் கெளதம் ராம் கார்த்திக் என இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டுள்ளார். பெரும்பாலும் சினிமாவில் திருப்புமுனை ஏற்படும் என்பதற்காக தங்களது பெயரை மாற்றுக்கொள்வது உண்டு. அந்த வகையில், "ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் யாரும் என்னை அழைக்க வேண்டாம்" என்று ரவி மோகன் முன்னதாக கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.